Total Pageviews

Tuesday, 17 February 2026

தமிழ்த்தாயை அழித்தொழிப்பதில் பலருக்கும் அதீத ஆர்வம் ?

மூத்த தமிழறிஞர் ஒருவருடன் உரையாடும் பொழுது, மிகுந்த மன  வேதனையுடன் சில கருத்துக்களை அவர் முன்வைத்தார். சிந்து சமவெளி சார்ந்த சில எதிர்மறையான கருத்துக்களை சமூகத்தில் படிய  வைக்கும் முயல்வுகள் அருவமாக நடப்பதாக அவர் கூறினார்.

.

மிகுந்த ஆழத்துடன் அவர் தமிழின் தொன்மை பற்றி பேசிய பொழுது. “நான் ஒரு மருத்துவர், சத்தியமாக தமிழறிஞர் கிடையாது - நீங்கள் கூறும் கூற்றை புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு தமிழ்த்திறன் கிடையாது. நீங்கள் கூறுவதை உலகம் சரியாக அறிந்திட வழிசெய்ய வேண்டும், அதனை மன்றம் செய்யும்.  ஆதலால்… அறிவியல் தமிழ் மன்றத்தின் சிந்து சமவெளி ஆய்வு இருக்கையில் 10 நிமிட கூர்மையான உரையை நீங்கள் ஆற்றுங்கள். தொடர்ந்து 10 அமர்வுகளில் உங்கள் கருத்துக்களை ஆழ்ந்து தமிழ் சமூகத்தில் பதிய வைக்கவும்” என்று கூறினேன். அவரது கருத்துரை youtube தளத்தில் காணொளியாகவும், தமிழ்ப் பெருநூலில் கட்டுரையாகவும் வெளிவரும். நமது கோரிக்கையை அவரும் அன்புடன் ஏற்றார். விரைவில் அமர்வுகள் துவங்கும்.

.

அது ஏன், தமிழ்த்தாயை அழித்தொழிப்பதில் பலருக்கும் அதீத ஆர்வம் ?, இந்த மெய்நிகர் உரைகள் மூலமாக, உண்மை வெளிவரட்டும். தமிழ் வெல்லும். வென்றாக வேண்டும். 17/02/2026.