Total Pageviews

Wednesday, 29 November 2017

ஏற்கனவே பற்பல தமிழ் அமைப்புகளில் உறுப்பினராக உள்ள நிலையில் அறிவியல் தமிழ் மன்றத்தில் நான் ஏன் உறுப்பினராக வேண்டும் ?

தமிழர்கள் காணாத மன்றங்கள் கிடையாது. இருந்தும்.
இன்றைய தேதியில்
நமது அறிவியல் தமிழில் நிலை
மிகவும் மோசமாகவே உள்ளது 
காரணம்...பற்பல.
நீங்கள் எந்தத் தமிழ் அமைப்பில் உறுப்பினராக இருந்தாலும். வாழ்த்துகள்
நீங்கள் எங்கள் மன்றத்தில் இணைவதில்
எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது.
எங்கள் வழிமுறை மிகவும் இயல்பானது.
உலக அளவில் இந்த மன்றம் இயங்கும்.
இந்த அமைப்பின் உறுப்பினர்கள்.
அனைத்து நாடுகளைச் சார்ந்தவர்களாகவும் இருப்பார்கள். 
அனைவரும் சிறு கைப்பிடி மண்ணை
ஓர் இடத்தில் இடுவது போலவும்.
இடப்பட்ட மண்ணை நேர் வழியில் நின்று ஒருங்கிணைத்து
ஒரு மலையாக உருமாற்றி

அறிவியல் தமிழ்ப்பணி செய்வதே நமது நோக்கம்.

அறிவியல் தமிழ் மன்றத்தின் அறிவியல் தமிழ் சார்ந்த கனவு என்ன ?

பண்டைய தமிழர்களின் வாழ்வியல், அறிவுசார் தரவுகளை ஆராய்ந்து அவற்றுள் நேரடியாகவும், மறைவாகவும் உள்ள அறிவியல் உண்மைகளை உலகிற்கு, அது புரிந்துகொள்ளும் வகையில், நடையில், அழகில் வழங்குவது.


நவீன உலகின் உலக மொழிகளின் மொழியியல் வெற்றிகளைத் தமிழில் கொணர்வது, நவீன உலகில் வெற்றியாளர்களாகத் தமிழர்கள் வாழ வழி  வகை செய்வது. இவை இரண்டுமே மன்றத்தின் முக்கியமான செயல்களாக அமையப்பெறும்.  

Tuesday, 28 November 2017

ஒரு ரூபாயை வைத்து என்ன செய்துவிட முடியும்?

பிளவுபட்டு உள்ள 
தமிழ் சமூகத்தை 
ஒரு புள்ளியில் குவிக்க வேண்டும் 
.
அறிவியலுக்கு இந்த சக்தி உள்ளது
.
6 கோடி தமிழர்களில்
0.0006 % மக்கள்
அறிவியல் தமிழ் மன்றத்தில்
ஒரு நாள் ஒரு ரூபாய் திட்டத்தில்
இணையும் நிலையில்
மன்றத்தின் ஒரு நாள் வருமானம்
6000 INR
.
தமிழுக்கு எவ்வளவோ செய்ய முடியும்

ஒரு ரூபாயை வைத்து என்ன செய்துவிட முடியும்?

பிளவுபட்டு உள்ள 
தமிழ் சமூகத்தை 
ஒரு புள்ளியில் குவிக்க வேண்டும் 
.
அறிவியலுக்கு இந்த சக்தி உள்ளது
.
6 கோடி தமிழர்களில்
0.0006 % மக்கள்
அறிவியல் தமிழ் மன்றத்தில்
ஒரு நாள் ஒரு ரூபாய் திட்டத்தில்
இணையும் நிலையில்
மன்றத்தின் ஒரு நாள் வருமானம்
6000 INR
.
தமிழுக்கு எவ்வளவோ செய்ய முடியும்

அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவர் யார் ? 

பொதுவாக தமிழ் சார்ந்த அமைப்புகளில்
உயர் பதவிகளில் உள்ளவர்கள்
சாகும் வரை தான் மட்டுமே
தலைவராக இருக்க விரும்புவார்கள்
இதனால், தானும் செலயப்படாமல்
தனது அமைப்பையும் செயல்பட விடாமல் தடுப்பார்கள்
.
நமது அறிவியல் தமிழ் மன்றத்தில்
தலைவர் என்று யாரும் இருக்க மாட்டார்கள்
ஒருங்கிணைப்பாளர்கள் ஒற்றைப்படை இருப்பார்கள்
எந்த முடிவையும் ஓட்டுக்கள் மூலமே எடுக்க முடியும்
நானே விரும்பினாலும்
எதையும் துவக்க நிறுத்த முடியாது

அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவர் யார் ? 

பொதுவாக தமிழ் சார்ந்த அமைப்புகளில்
உயர் பதவிகளில் உள்ளவர்கள்
சாகும் வரை தான் மட்டுமே
தலைவராக இருக்க விரும்புவார்கள்
இதனால், தானும் செலயப்படாமல்
தனது அமைப்பையும் செயல்பட விடாமல் தடுப்பார்கள்
.
நமது அறிவியல் தமிழ் மன்றத்தில்
தலைவர் என்று யாரும் இருக்க மாட்டார்கள்
ஒருங்கிணைப்பாளர்கள் ஒற்றைப்படை இருப்பார்கள்
எந்த முடிவையும் ஓட்டுக்கள் மூலமே எடுக்க முடியும்
நானே விரும்பினாலும்
எதையும் துவக்க நிறுத்த முடியாது

அறிவியல் தமிழ் மன்றத்தில் இணைய ஒரு ரூபாய் கேட்பதன் மர்மம் என்ன ?

வெள்ளை அறை மூலமாக
மாதாமாதம் சராசரியாக 15,000 ரூபாய் செலவு செய்யும் நிலையில்
தமிழ் நண்பர்களிடமிருந்து நாள் ஒன்றிற்கு 1 ரூபாய்
சந்தா கேட்பதன் நோக்கம் என்ன ?.
உளவியல் சார்ந்த விளக்கம் இது புரியும் மக்களுக்கு புரியும்.

ஒரு சமயத்தில்
தமிழக அரசு மருத்துவ மனைகளில்
வெளி நோயாளி கடவுச் சீட்டுகள் பற்றி
ஒரு IAS அதிகாரி கொடுத்த கருத்துதான் எனது திட்டத்தின் ஆணிவேர்.

மருத்துவர்கள் அவரிடம்.
சார்..ஒரு நோயாளி வந்தால்
அவருக்கு பற்பல சோதனைகளை செய்து
மருந்துகளை எழுதி
அவரது லேப் ரிசல்ட் உட்பட அனைத்தையும்
எழுதிக் கொடுத்து அனுப்பினால்
அடுத்த நாளே
கடவுச் சீட்டை "காணவில்லை" என்று கூறிக் கொண்டு வருகிறார்கள்.

மீண்டும் பல செயல்களைச் செய்து
அனுப்ப வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்
கடவுச் சீட்டினை தொலைக்காமல் இருக்க
ஏதாவது செய்யுங்கள்"என்றனர்.

"நான் முதல்வரிடம் பேசி
இனிமேல் அரசு மருத்துவ மனைகளில் கடவுச் சீட்டு 1 ரூபாய் 
என்று நிர்ணயிக்க வற்புறுத்துவேன்
அதன் பின்னர் யாரும் எதையும் தொலைக்க மாட்டார்கள்
ஆனால் என்ன...
கொடி பிடித்து பேசும் எதிர் காட்சிகள்
அரசை குறை கூறுவார்கள்
இருந்தாலும் முயற்சி செய்வோம்" என்றார்.

இப்பொழுது புரிகிறதா. 1 ரூபாய் வந்த கதை?

Monday, 20 November 2017

1 ருபாய் முகநூல் விளையாடல் - அனுபவங்கள் அப்படியே ...

இது என்ன கொடுமை ? 

ஒரு ரூபாய் சந்தா - அறிவியல் தமிழ் மன்றம்

நாள் ஒன்றுக்கு ௧ ரூபாய் கொடுத்தால் மட்டுமே 
ஒரு தமிழ் அமைப்பில் உறுப்பினர்  ஆக முடியும் ?

இப்படி ஒரு கருத்தியல் தமிழ் சமூகத்தில் முன்வைக்கப்பட்டால் 
சில கேள்விகள் இயல்பாக எழும்

அவை,
௧. பணம் வாங்குவது முகநூலில் தமிழில் எப்படி சரியாகும் ?

௨. தமிழ் அமைப்பு என்றாலே இலவச உறுப்பினர் நிலையில் தானே உலகம் முழுவதும் நிகழ்கிறது ?

௩. சந்தா செலுத்தி தமிழ் அமைப்பில் சேர்ந்தால் அது சரியாகுமா ?

௪. தமிழ்ப்பணியில் பணம் உள்ளே வரலாமா ?

௫. தமிழுக்காக உயிரையும் கொடுக்க மக்கள் தயாராக இருக்கும் நிலையில் இந்த முயற்சி எதற்கு ?

௬. காசு கொடுத்து சேர்வதால் என்ன பயன் ?

௮. இது எங்கு தமிழை நிலைபெற வைக்கும் ?

௯. தமிழ்ப்பணியில் ஆதாயம் காண நினைப்பது சரியா ?

௧௦. தாய் தமிழுக்கு தொண்டு செய்பவர்கள் பணம் கேட்பது ஏன் ?

சில கேள்விகளைத்தான் இங்கு வரிசைப் படுத்தினேன்...

இன்னும் நிறைய உள்ளன....

அறிவியல் தமிழ் என்பது ஒரு நிலையான புள்ளியை நோக்கிய பயணமன்று

அது, தொடர்ந்து நகரும் ஒரு புள்ளியை துரத்தி பிடிக்கும் பயணமாகும்.

பறந்து விரிந்து வாழும் உலகில் 118 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

ஆனால், தமிழகம் மற்றும் இன்னும் சில நாடுகளில் மட்டுமே 
அவர்கள் ஒரு பெரும் குழுவாக வாழ்கிறார்கள்.

பெரும் குழுக்களில் 
ஒருமித்த சிந்தனை தோன்றும் அறிஞர்கள் கூட்டத்தினில் மட்டுமே
அறிவியல் தமிழ் உருவாக்கம் பற்றிய 
கருத்துகள் ஓரளவிற்கு கவனிக்கப்பட்டு செப்பனிடப்படும்.

மற்ற இடங்களில்,
விரிந்து தோன்றி மறையும் புஸ்வாணமாக மட்டுமே 
அறிவியல் தமிழ்  வளர்ச்சி தழைக்கும்.

தனி நபரின் முகநூல் பக்கங்களில் 
சிறு குழுவின் அணையக் கூடிய இணைய விலாசத்தில் 
தனி நபர் கோப்புகளில் இருத்தப்படும் கலைச்சொற்கள்
காலத்தால் அழியாமல் இருக்கும் என்று எதிர்பார்ப்பது சரியா ? 

மனிதர்களைவிட 
மொழிதான் முக்கியம்
என்று கணிக்கும் மனிதர்கள் பலர் இங்கு இல்லை.

நண்பரின் நண்பர் நண்பர்
எதிரியின் எதிரி நண்பன்
என்னும் நிலையில் வாழும் மக்களால்
புரட்சிகளை உருவாக்க முடியாது.

அறிவியல் மொழியாக தமிழ் மலர 
நாம் நிறைய செய்தாக வேண்டும்

முதலில் சில உண்மைகளை புரிந்துணர வேண்டும்

உலகம் முழுவதும் பொதுவாக 
அறிவியல் அறிஞர்கள்  சிந்திக்கும் மொழியாக ஆங்கிலம் உள்ளது.

பல்லாயிரம் ஆங்கில மருத்துவ ஆய்வு இதழ்கள் உள்ளன. 
அவற்றுள் அதிகமதிகம் கட்டுரைகள் உள்ளன.
ஒரு ஒரு கட்டுரையும் அறிவியல் நுணுக்க செய்திகளின் கோர்வை 
நாள் ஒன்றிக்கு பற்பல அறிவியல் சொற்கள் 
புதிதாக ஆங்கிலத்தில் உருவாக்கப்படுகின்றன. 

பல நாடுகளைச் சார்ந்த 
அறிவியல் வல்லுனர்கள் 
சேர்ந்தும் தனியாகவும் இப்பணியைச் செய்கின்றனர்.

ஆங்கிலம் வளர வேண்டும் என்பதை விட தங்களுடைய அறிவுசார் திறன் உலகிற்கு தெரிய வேண்டும் என்பதால் 

ஆங்கிலத்தில் உரையாட, எழுத, சிந்திக்க வேண்டும் 
என்கிற நிலையை ஆங்கில மொழியை வடிவமைத்த 
ஆளுமைகள் உருவாக்கியுள்ளன.

தமிழில் நிலை முற்றிலும் வேறு.

தமிழ் மக்களே தமிழ் மொழி மீது அதிக நம்பிக்கை கொள்வதில்லை

ஏதாவது மருத்துவர் முழுவதும் தமிழில் பேசட்டும் 
எத்தனை தமிழ் மொழி அறிஞர்கள் அவரிடம்
நம்பிக்கையுடன் மருத்துவம் செய்து கொள்வார்கள் என்று தெரியாது ?

வருடா வருடம் 
சுமார் 5000 மருத்துவர்கள் தமிழ் நிலங்களில் இருந்து மருத்துவர்களாக தெரிவாகின்றனர் 

இவர்களுள் 
தமிழர்கள் 
50 விழுக்காடு என்றாலும் 
2500 பேர் உருவாக வேண்டும்
தமிழில் எழுதவும் பேசவும் விரும்பும் மக்கள் 
50 விழுக்காடு என்றாலும் 
1250 பேர் உருவாக வேண்டும்  

ஆனால் உண்மை நிலை அவ்வாரா உள்ளது ?