Total Pageviews

Tuesday, 29 May 2018

புதுவிழுது திட்டம்



    
புதுவிழுது திட்டம்

இளம், புது எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் திட்டம் அறிமுகம்
நம் சமூகத்தில் எழுத்தாளர்களை இரு வகையில் பிரிக்க முடியும்.

௧. புகழ்பெற்ற,சக்தி வாய்ந்த,நிறைய நூல்களைப் படைத்த எழுத்தாளர்கள்
௨. புது, இளம், எளிய, புகழ் பெறாத  எழுத்தாளர்கள்

முதல் வகையினருக்கு வாழ்த்துக்கள்.
இரண்டாம் வகையில் உள்ளவர்களுக்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும்
நெடு நாட்களாகவே இந்த எண்ணம் என்னுள் உள்ளது.
அதற்கான ஒரு திட்டம் தற்பொழுது அறிமுகமாகிறது.
.
திட்டத்தின் பெயர்: புதுவிழுது திட்டம்
தமிழ் மொழியின் எழுத்து உலகை தாங்கி நிற்கும் புது விழுது என்று ஏற்கலாம்.  

திட்டத்தின் சாரம்
௧. புது, இளம், முதல் நூல் எழுதும் எழுத்தாளர்கள் ஆவர்களது நண்பர்கள்  எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் appliedtamil@gmail.com , +91 8939462185
௨. மாலைப் பொழுதில் 1900 - 2100 IST ஒரு சிறு நிகழ்வை நடத்தி நூல் வெளியீட்டை மேற்கொள் முடியும்.
௩. இடம் - அறிவியல் தமிழ் மன்ற வெள்ளை அறை (இலவசம்)
௪. மின்சார செலவு - அறிவியல் தமிழ் மன்றம் ஏற்கும்.
ஆக, எழுத்தாளார் தன்னுடைய நண்பர்களுடன் (அதிகபட்சமாக 15) வெள்ளை அறையில் இலவசமாக ஒரு நிகழ்வை நடத்த முடியும்.
வெள்ளை அறை இணையம் இலவசமாக பகிரப்படும் அதன் மூலமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நிகழ்வைக்  காணும் வகையில் எழுத்தாளர் தனது முகநூல் பக்கத்தில் நிகழ்வை பகிர முடியும்.
-  இந்த முறைமையின் மூலமாக ஒரு புது, எளிய எழுத்தாளரை உலகம் அறிவதற்கு அறிவியல் தமிழ் மன்றம் உதவியது என்று அமையும்.
-  ஒரு பைசா செலவு கூட இல்லாமல்  ஒருவர் ஒரு நூலை வெளியிட இந்த திட்டம் உதவும்.
- வாருங்கள், பயன் பெறுங்கள்.


அன்புடனும், அறிவியல் தமிழுடனும்
பேராசிரியர் டாக்டர். மு.செம்மல் மணவை முஸ்தபா
White Room for Tamil (A/C) (19 Seating Capacity)
AE 103, 6th Street, 10th Main Road
Anna nagar West, Chennai 40
500 Meters from Anna Nagar Metro Station
     

No comments:

Post a Comment